என்ன சாப்பிட்டாய் ?
நெல்லுச் சோறு -
நீ என்ன சாப்பிட்டாய் ?
சாதம்..
சொல்கையிலேயே
முன்னது உதிரி உதிரியாய்
நாவில் ஈரம் நனைப்பதாய்
உண்ண அழைப்பதாய் ... .
சாதமோ சூடாய்
விரல் ஒட்டுவதாய்
நைந்து போனதாய்
நா ஈரம் துடைப்பதாய்...
எனக்கு மட்டுந்தான் இப்படியா !
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment