மலர்த்தும் வலி மரத்திற்கு இல்லையோ ?
&
மரம் மொக்குகளாய்
கருவுற்று நின்றது -
இதோ இந்த இரவு நகர்வதற்குள்
புஷ்பித்துவிடும் --
மலர்த்தும் வலி என்ன
மரங்கட்கு இல்லையோ ?
மகப்பேறின் வலிஅலறல்
இரவின் சொட்டு அமைதியில்
செவி சேர்ந்து
கண்ணீர் கோர்க்கிறது-
காலை விடியலில்
கவலையாய் விரைகிறேன் -
ஓ ! கண் கொள்ளாக் காட்சி !
மரமே மலராய்
வண்ணமே மரமாய் -
என் மனமே பூவனமாய் !
கண்முன் வளர்ந்[த்]த மகளின்
முதல் மகபேறல்லவோ !
மரத்தின் விழிகளில்
மௌனப் பெருமிதம் !
------சந்திர கலாதர்

No comments:
Post a Comment