Sunday, February 19, 2012

20.02 2012 / காலை 06.30 மணி /திங்கள் 
சென்னையில் பனிமூட்டம் .
வானில் இருந்து இறங்கிய பெரும் திரை .
அழகாய்,அற்புதமாய் ,விருந்தாய் ,மகோன்னதமாய்,
கவிதையாய் ,குளிர்வாய் ,உல்லாசமாய் ...
எப்படிச் சொல்வேன் --
மொட்டைமாடிக்கு நாலுகாற் பாய்ச்சலில் பாய்கிறேன் ..
அங்கே இதோ -
 
&
 
மேகம் ஒன்று இன்று 
 
என்னைக்  கட்டி அணைக்குதே !
 
மேனி எங்கும் நனைந்திடவே   
 
ஈர முத்தம் பொழியுதே !
 
குளிரக் குளிரப் பேசிப்பேசி 
 
மெய் சிலிர்க்க வைக்குதே !
 
மலரினும்  மெலிதான  
 
பொடி மழை தூவுதே!
 
பெரும்   மேகம் ஒன்று
 
திசை இழந்து தடுமாறி
 
மண் இறங்கி மயங்குதோ ?
 
மீள வழி புரியாது
 
அலைந்து திரியுதோ ?
 
விரட்டி விரட்டி வாடைக் காற்று
 
மேகம் துரத்துதோ ?
 
சிறு குழந்தைகள்போல்
 
ஓடி விளையாடுதோ ?
 
கிழக்கில் எங்கோ 
 
குளிர்த் தீப் பிடித்து 
 
இப்புகை மூட்டமோ ?
 
பார்வையை விழுங்கிவிட்டு 
 
வெண்போர்வை போர்த்துதோ ?
 
கீழ்வானம் பழுக்காத   
 
மர்மம்   என்னவோ   ? 
 
சூரியனின்  வெற்றிக்கொடி  
 
பறக்கவில்லையே  ?
 
பொன்னம்புகள்  வானெங்கும்  
 
சீறவில்லையே  ?
 
அரிதான  தோற்றம்  கண்டேன்  -
 
இயற்கைக்கு  ஓர்  கோடி  
 
நன்றி  சொல்கிறேன்  ! 
 
 
 
 
---சந்திர  கலாதர்   

No comments:

Post a Comment