நட்புச் சிறகுகள் நான்கைந்து ..!
&
நட்புச் சிறகுகள் நான்கைந்து
வானின் குறுக்கே அருகருகாய்
அணிவகுப்போ எனப் பறக்கையிலே
நெஞ்சில் துள்ளுது ஓர் ஆனந்தம் -
பறவையாய்ப் பிறக்க ஆசை கொண்டேன்
தடை இல்லாத பயணம் கனவு கண்டேன் -
மறைப்பது எதுவும் இடையில் இல்லா
இயற்கைக் காட்சிகள் இனி என் வயமாகும் -
காற்றின் முதுகில் மிதந்து செல்வேன்
மேகங்கள் என்னை நெருங்கி வரும்
கீதங்கள் தன்னால் பிறந்து வரும்
அலைகளின் மேலே அலைந்திடுவேன்
காலைக் கதிரைக் கிழக்கில் வரவேற்பேன்
நிலவின் தனிமையில் நட்பாவேன் !
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment