Wednesday, February 29, 2012
மலர்த்தும் வலி மரத்திற்கு இல்லையோ ?
&
மரம் மொக்குகளாய்
கருவுற்று நின்றது -
இதோ இந்த இரவு நகர்வதற்குள்
புஷ்பித்துவிடும் --
மலர்த்தும் வலி என்ன
மரங்கட்கு இல்லையோ ?
மகப்பேறின் வலிஅலறல்
இரவின் சொட்டு அமைதியில்
செவி சேர்ந்து
கண்ணீர் கோர்க்கிறது-
காலை விடியலில்
கவலையாய் விரைகிறேன் -
ஓ ! கண் கொள்ளாக் காட்சி !
மரமே மலராய்
வண்ணமே மரமாய் -
என் மனமே பூவனமாய் !
கண்முன் வளர்ந்[த்]த மகளின்
முதல் மகபேறல்லவோ !
மரத்தின் விழிகளில்
மௌனப் பெருமிதம் !
------சந்திர கலாதர்
கவிதைச் சொல் எப்படி வேண்டும் ?
நெஞ்சை மென் இறகென வருட வேண்டும் -
சொல்லில் சிறு போதை வேண்டும்
விழியோரம் நீர் தேக்க வேண்டும்
மாசு சற்றேனும் கரைய வேண்டும்
என்னில் பரிவு படர வேண்டும்
மனம் பரந்து விரிய வேண்டும்
காதல் துளிர்க்க வேண்டும்
பெண்மை போற்றிட வேண்டும்
தாய்மை தருவது வேண்டும்
இயற்கை இதம் வேண்டும்
படைப்பின் வியப்பு வேண்டும்
பொய்மை இலாதது வேண்டும்
உணர்வின் எதிரொளி வேண்டும்
குழந்தையின் நடை ஒலி வேண்டும்
மழலையின் குழைவுகள் வேண்டும்
வசந்தத்தின் வண்ணங்கள் வேண்டும்
நறுமண எண்ணங்கள் வேண்டும்
இறக்கைகள் படைக்க வேண்டும்
என்னை விண்ணுள் உயர்த்த வேண்டும்
என்னை மானுடனாய் மாற்ற வேண்டும்
இவையே கவிதையில் என்றும் காண வேண்டும் !
-----சந்திர கலாதர்
Tuesday, February 28, 2012
the 'tweet tweet' call
&
the "tweet tweet" call 'in pairs'
from the sweet throat
of the split-tailed black dra[o]ngo
in bold postures on slender branches
matches the whispering calls
of a love in tender dreams
on a moon-flooded night !
what an aquiline shape
with a lengthy forking tail
god has blessed this bird with!
a pleasing feast for eyes
as it unfolds and tucks in
its graceful wings fanning designs
in short ,sudden and swift flights
composure calm and bearing elegant
intermittent notes in melody soaked ,
piped through the honeyed throat,
a beauty carved out of a glossy black!
o how many are your modulations ,
each one competing with the rest
in flooding my heart and soul
in every musical excellence !
you have become my inseparable companion
amidst all morning glories!
and the music and melody of my life!
----s.chandra kalaadhar
somewhere in some desolate corner
crouching on the shores of mind
someone may await daily my poems
with an undying passion
and as a curing touch on wearied heart -
for that one i write in endless streams
whose name,sex,face and voice ,
nothing i am aware of-
may be a thousand years hence-
to that expectant one i dedicate my poem-
my heart would throb with that soul
my vibrations would merge in perfect harmony
winging past gladly the sweat of centuries.
----s.chandra kalaadhar
Monday, February 27, 2012
எல்லோரும் குயிலைப் பாடுங்கள்
மயிலுடன் தோகை வீசுங்கள்--
நான் என் கரிச்சானைப் பாடப் போகிறேன்
உடம்பில் பொட்டு வெண்மை இல்லை
முழுக்கவே மை சொட்டும் கறுப்பு
கை அடக்கமாய் அப்படி ஓர் உடம்பு
நீரோட்டமாய் அதன் வடிவு
உடலின் நீளம் ஓர் இரட்டை வால்
விசிறியாய் விரியும் அதன் நேர்த்தி
தவசி போலும் ஓர் தியானம்
தன்னை மறந்து இழையும் ராகம்
இரட்டையாய் பிறக்கும் சொற்கள்
தலையும் இரட்டை மண்டை
வருவதும் எப்போதும் இரட்டை
உன்னைச் சார்ந்தது எல்லாம் இரட்டைதானோ?
பூங்கிளைக்கும் வலியாத அமர்வு
சட்டெனச் சுழலில் பறந்து
என்ன நீ கொணர்வாயோ?
ஏதும் தின்று நான் காண்கிலேனே -
பல மொழிகள் பேசுகையில்
ஒவ்வொன்றின் பொருள் ஆய்ந்து
நான் தவிப்பில் துவள்வது உண்டு -
பறவை மொழி அறியாது
நான் படும் துயர் எவர் அறிவார் ?
ஓர் இரட்டை இரட்டையுடன்
தினம் காலை நேயம் வளர்த்தேன்
மொட்டைமாடியில் தவறாது வந்து
கீதம் பாடி எனைச் சிலிர்க்கும் -
அவை பாராது நிம்மதி இல்லை
என் காலையே வீணானது போலாகும்
இன்று தாமதம் ஆகிப் போச்சு
காணாது நொந்து போச்சு-
வான்வெளியுள் மௌனமாய்க் கூவி
வாராய் வாராய் எனத் துடித்தேன் -
வந்தன வந்தன கண்டேன்
ஆனால் அமராது விலகிப் போச்சே
ஓ.என் மீது கோபம் தானோ ?
நட்பில் விரிசல் இல்லை
நாளை எல்லாம் சரியாகும் !
---சந்திர கலாதர்
காதல் என்றும் தனிமை தேடும்
யாரும் இல்லாத தோப்பு
எவரும் பார்க்காத மறைவு-
உடலுள் உள்ளத்தையும்
உள்ளத்துள் உடலையும்
திணித்துப் பார்த்திட ஓர் துடிப்பு ;
அது ஓர் சொல்லமுடியாத தவிப்பு-
பெருமூச்சுகள் சிறுமொழி பேசும்
உலகே எதிர் விழியாய் வாட்டும்
நேரமும் பகையாய்ச் சுருங்கும்
சந்தேகம் சுற்றிப் பொழியும்
தலை சுற்றிக் கிறுக்காய் அலையும்
கைபேசி கண்ணையே வாங்கும்
வீதியில் வருவோர் பட்டியல் எடுக்கும்
இக்காதல் கல்யாணத்துள் கலந்தால்
சே ..இத்தனையும் செத்துப் போகும் .
--சந்திர கலாதர்
Sunday, February 26, 2012
நட்புச் சிறகுகள் நான்கைந்து ..!
&
நட்புச் சிறகுகள் நான்கைந்து
வானின் குறுக்கே அருகருகாய்
அணிவகுப்போ எனப் பறக்கையிலே
நெஞ்சில் துள்ளுது ஓர் ஆனந்தம் -
பறவையாய்ப் பிறக்க ஆசை கொண்டேன்
தடை இல்லாத பயணம் கனவு கண்டேன் -
மறைப்பது எதுவும் இடையில் இல்லா
இயற்கைக் காட்சிகள் இனி என் வயமாகும் -
காற்றின் முதுகில் மிதந்து செல்வேன்
மேகங்கள் என்னை நெருங்கி வரும்
கீதங்கள் தன்னால் பிறந்து வரும்
அலைகளின் மேலே அலைந்திடுவேன்
காலைக் கதிரைக் கிழக்கில் வரவேற்பேன்
நிலவின் தனிமையில் நட்பாவேன் !
----சந்திர கலாதர்
when my heart deeply pines for you
when my heart deeply pines for you
o my dear, why all the birds
that chirp and coo and in graceful flights
seem to carry a message from you
but cruelly not drop it onto my longing heart
--s.chandra kalaadhar
when you are touching me softly
when you are touching me softly
with your closed eyes drenched in love
o my love,you are touching my soul
deeply inset in your heart
---s.chandra kalaadhar
i am after that molten gold..!
&
o dear your honeyed words
can no longer hold me
in your sweet clutches-
i am after that molten gold
that floods the eastern gates in early morn-
miss i would otherwise this supreme wealth
and no time whatsoever to divert them
to my craving and starving intellect !
i am on a mad rush to the distant horizon
o my love , while the two sparkling nights
that swim in the great white seas of your eyes
lull me to gentle sleep amidst cosy dreams
this golden explosion shatters me from ignorance
and i am greedy and crazy over it !
must i leave ,grieve not ,o my dear queen!
---s.chandra kalaadhar Friday, February 24, 2012
the thick-foliaged trees remain
in heavy silence as if in mourning-
do they ? no,i am wrong ;
beneath their stillness of a statue
there surges the throbbing of their hearts-
a speechless language
soaked in intense emotions-
to share with us all dear thoughts.
look deep into their souls
with all the passions of a learning heart
and catch the wave on wave of vibrations
that lap on your banks;
partake in the joys and sorrows
of a world trapped at a spot from birth to death .
o they have endless stories
for the visiting winds that throw their arms
in friendly warmth on every branch.
are you a poet with the heart of a child?
the trees open their hearts to shower your soul !
Sunday, February 19, 2012
20.02 2012 / காலை 06.30 மணி /திங்கள்
சென்னையில் பனிமூட்டம் .
வானில் இருந்து இறங்கிய பெரும் திரை .
அழகாய்,அற்புதமாய் ,விருந்தாய் ,மகோன்னதமாய்,
கவிதையாய் ,குளிர்வாய் ,உல்லாசமாய் ...
எப்படிச் சொல்வேன் --
மொட்டைமாடிக்கு நாலுகாற் பாய்ச்சலில் பாய்கிறேன் ..
அங்கே இதோ -
&
மேகம் ஒன்று இன்று
என்னைக் கட்டி அணைக்குதே !
மேனி எங்கும் நனைந்திடவே
ஈர முத்தம் பொழியுதே !
குளிரக் குளிரப் பேசிப்பேசி
மெய் சிலிர்க்க வைக்குதே !
மலரினும் மெலிதான
பொடி மழை தூவுதே!
பெரும் மேகம் ஒன்று
திசை இழந்து தடுமாறி
மண் இறங்கி மயங்குதோ ?
மீள வழி புரியாது
அலைந்து திரியுதோ ?
விரட்டி விரட்டி வாடைக் காற்று
மேகம் துரத்துதோ ?
சிறு குழந்தைகள்போல்
ஓடி விளையாடுதோ ?
கிழக்கில் எங்கோ
குளிர்த் தீப் பிடித்து
இப்புகை மூட்டமோ ?
பார்வையை விழுங்கிவிட்டு
வெண்போர்வை போர்த்துதோ ?
கீழ்வானம் பழுக்காத
மர்மம் என்னவோ ?
சூரியனின் வெற்றிக்கொடி
பறக்கவில்லையே ?
பொன்னம்புகள் வானெங்கும்
சீறவில்லையே ?
அரிதான தோற்றம் கண்டேன் -
இயற்கைக்கு ஓர் கோடி
நன்றி சொல்கிறேன் !
---சந்திர கலாதர்
Thursday, February 16, 2012
ஒவ்வொரு காலையும்
&
ஒவ்வொரு காலையும்
புத்தனாய்ப் பிறக்கிறேன் ;
தெளிந்த சிந்தனைகள்
ஸ்படிக நீரோட்டமாய் -
கவலையின் மூலங்கள்
தெள்ளத் தெளிவாய் -
வாழ்வின் நிலவொளி
கிட்டும் தொலைவில்-
எனக்குள் என்னைச்
சரியாய்ப் பார்க்கிறேன் -
எதற்குமே ஓர் வேராய்
என்னையும் காண்கிறேன் -
பிறரது நல்லவை
காலைக் கதிராய்-
என் நச்சை நசுக்கி
தூயவை ஏற்கிறேன் -
இனி இன்பமே வாழ்வில்
மௌனமாய் மகிழ்கிறேன் !
&
நொடிகளின் விரைவில்
நிகழ்வின் உராய்வில்
அவசர அறிவில்
கோப வெம்மையில்
இன்னா சொற்கள்
வெடித்து எரிகிறேன் -
எல்லோரும் எதிராய்ச்
ஏன் இச்சதிகளில் ?-
மனம் வெம்பியே
நைந்து சாகிறேன் -
எங்கும் இருளாய்
முட்டித் தவிக்கிறேன்-
எனது புத்தன்
எங்கே செத்தான்?
எப்படி என்னுள்
இத்தனை பேய்கள்
தலை விரிகோலமாய்
என்னைச் சிதைத்து
என் உயிர் குடிக்க ?
&
நாளை மறுபடி
நல்லவன் ஆவேன் என
இழுத்துச் செல்லும்
இரவிடம் சொன்னேன் -
மெல்ல ஓர் முறுவல்
அது பூத்திடக் கண்டேன் !
-----சந்திர கலாதர்
Wednesday, February 15, 2012
15.02.2012.புதன் /மாசி 3/கர ஆண்டு
உதய கால நிகழ்வுகள்
&
உதய வேளை-
தூரத்து உயர்ந்து அகன்ற கட்டிடங்கள்
மறதியில் அமிழ்ந்த 'நிகழ்ந்தவை'போ
கடலில் தொலைவில் காணும் கப்பல்கள்போல்
எண்ணெய்க் குடுவை மூழ்கிய பொருட்கள்போல்
விளக்கங்கள் இழந்து விளிம்பு
எந்த இலக்குமே இல்லாது
சும்மா விருட்டென வான் எழுந்து
'படபட' வென ஓரிரு வட்டமிட்டு
கூட்டமாய் அழகாய் வழி சறுக்கி
உல்லாசம் ஒன்றுக்கே காலை தரும்
உற்சாகப் புறாக்களை என்ன சொல்வேன் !
கறுப்பின் அழகில் சந்தேகமோ?
'பளபள'க் கரிச்சான்கள் கண்ட பின்பு
'சுறுசுறு'க் கறுப்பினில் அழகு காண்பீர் !
குட்டிக்கரணம் அடிக்கும் 'ரெட்டைவால்'கள்
விசிறி 'றெக்கைகள்' விரித்துப் பாய்ந்து
போர்விமானம்போல் பறக்கக் காண்பீ
கூவும் குரலோ கொஞ்சும் மொழி !
எத்தனை முயன்றும் 'நகல்'மொழியில்
நெருங்கவே இயலாது தோல்வி கண்டே
அதன் பாடலில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்!
திருப்பி மொழியாத் திறமும் தோற்க வைக்குது !
இந்தக் கறுப்பின் வடிவோ ஓர் விழி விருந்து !
எப்போதும் அவசரம் ! எப்போதும் நேர்கோடாய் !
'கீ..கீ..கீ' எனக் கத்திக்கொண்டே ஒர்நோக்காய்
காற்றைக் கிழித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள் !
ஆம், எங்கே போயின என் சிட்டுக் குருவிகள் ?
அதன் 'சிடு...சிடு' சொடுக்குகள் கேட்டு எத்தனை நாளாச்சு ?
இவை அனைத்தையும் அமைதியில் ரசிக்கும்
அழகாய் விடிந்த காலை வான்வெளி காண்!
---சந்திர கலாதர்
Monday, February 13, 2012
to tell you the truth...
to tell you the truth..
&
to tell you the truth bluntly
he expects a comforting word
whenever he opens email
on posting his creation-
once in a while he gets it for works
'not masterpieces' in his view-
the sterling works go uncared-for!
the mind dejected , winds up his interest
the gloom sets in his heart-
thinks the world is very cruel
and a great riddle beyond him-
none about him has the taste-buds
for the dream-receipes made of lovely words-
who cares for a poet with dreamy eyes
fashioning thoughts on intricate moulds?
he is lonely,so lonely with his monitor
and the ' clucking ' keyboard
that translates his thoughts from finger-hits-
even a word or two of kudos he rarely gains
jump and die within him with none to lend ears-
leave others--relatives or friends--
o how he yearns for a pat off the eyes of one
on narrating his poem in full blast of enthusiasm-
destined not to be,he is almost in tears
deprived of a breeze from the heart of his dear wife!
---sundaram chandrakalaadhar.
Sunday, February 12, 2012
a speck of a speck am i !
&
a speck of a speck am i
underneath this vast dome of sky-
no millionth of a second
without changes around me;
activities incessant,both silent and noisy-
every moment new ,every moment fresh;
to one who has searching senses
and penetrating vision
no end to wonder,no way to boredom-
the clouds speak in silence
the blue hugs you close
the green kisses the cheeks
the flowers communicate in colours-
endless arrays of universes
shout at their high-pitched silences
crying for our ears and attention
through mind-boggling distances-
o man, be alert and tune yourself
to the unheard voices
and keep your spirit ever in joy!
&
chandra kalaadhar
Subscribe to:
Comments (Atom)




