இரு புள்ளிகள் இடையே
மிகக் குறுகிய தூரம்
இணைக்கும் நேர்கோடே--
பல பொய்கள் புரட்டி
மூடி மறைத்தாலும்
இறுதியில் முளைப்பதோ
உண்மை நேர்கோடே -
உண்மை நேர்கோட்டை
வரைதல் கூடின்
அதன்பின் நெஞ்சில்
ஏது கனம் ?
அதுபோல் எழுத்திற்கு
தேவையோ அலங்காரங்கள் ?
வாடும் ஒப்பனை
வனப்பை மறைக்கும் ;
மாயை சேர்க்கும்
வாய்மையை மிதிக்கும் ;
எளிமையின் வனப்பே
உண்மையின் உன்னதம் -
காந்தியின் எழுத்து
எளிமையின் உச்சம்-
நிகண்டை நாடா
சத்தியச் சுவடுகள் !
எளிமை என்பது
எளிதே அல்ல !
சத்தியம் நடக்கும்
தனி வழிப் பாதை !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment