ஒரு பிஞ்சின் பிச்சை
&
கலைந்த சிகைவழி
கண்கள் கெஞ்சும் -
கிழிந்த உடைவழி
வறுமை வியர்க்கும் -
ஏந்திய கைகள்
ஏமாற்றம் பழகும் -
'இல்லை இல்லை!'
செவியுள் குத்தும் --
'போ போ 'என்பதே
நெஞ்சில் உதைக்கும்--
' அம்மா ! தாயே !'
எவர் நெஞ்சில் உறைக்கும் ?
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment