மாசி மாதப் பௌர்ணமியை நேற்றுக் காணாமற் போனேன் -
மாசி மாதம் ஓர்முறை ஆண்டாண்டு வரலாம்
மாசி மாதம் ,ஆனால் ,என் வாழ்வில் எத்தனை அறியேன் -
முழு நிலைவை இழந்தது என் பேரிழப்பே
எனக்காகக் காத்திருந்து ஏக்கத்தில் தேய்ந்து போகுமே !
குளிர் நிலவின் வெண்முகத்தில் கண்ணீர் பதித்தேனே !
இனி நாள்தோறும் இதற்கு ஈடாய் இதனைச் செய்குவேன்-
எழும் கதிரோன் விழும் பரிதி வளர் நிலவு மெலி நிலவு
தினம் காத்திருந்து தவம் இருந்து காற்றினில் கண் மூழ்கி
தொடு வானில் விழி பதித்து வண்ணமிடை 'வருக' சொல்லுவேன் !
----சந்திர கலாதர்

No comments:
Post a Comment