Sunday, June 26, 2011

I want to tear my masks to be 'real I ' .

நக்ஷத்திரமாய்ப் பதவியிலோ ,பணத்திலோ,திரையிலோ அரசியலிலோ

'டால்' அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் ஒரு நிமிடம் பாராட்டு

மழைச் சொரிவில் 'சிந்தனை'க்குடை விரித்துத்  தன்னை நனையாது

பார்த்துக்கொள்ள விழைகிறான் --

அவனுக்குத் தெரியும் அவனையே பார்த்துக் கொள்ள ..!

அவனுக்குத் தெரியும் தன் முகங்கள் எத்தனை ?

தன் நாவுகள் எத்தனை ? தன் பயணங்கள் எத்தனை ?.என்பன எல்லாம் --

இது எல்லோர்க்கும் இயற்கைதானே ?

சர்வ சாதாரண நிகழ்ச்சி தானே  ?

இதை ஏன் எழுத  வேண்டும் ?--சிலர் கேள்வி இது .

இதற்குப் பின்னால் பதில் சொல்கிறேன் .

இப்போது எண்ணம் --

என்னைத் தேடி எனக்குள் பயணம் .

பாராட்டு முழக்கங்கள் வழுக்கும் வேளை --

என்னைத் தேடி என்னுள் ஒரு பயணம் ..

ஒவ்வொன்றாய் முகத்திரை ஒதுக்கிப் புகுந்து

மறந்த முக தரிசனம் மன ஆடி தேடுகிறேன் ;

உண்மைச் சிறு சுடர் உள் அறை உயிர்க்கிறேன்--

உண்மை முகம் நாடி ஒப்பனை உரிக்கையில் 

காலடி வீழும் வக்கிரச்  சருகுகள் கணக்கில கணக்கில !

ஒ !இத்தனை புழுங்கலில்  நாற்றமடிக்கிறேன் !

பொய்மை மேவிய புண்கள் இவையோ ?

                                       &&

போற்றும் குரல்களோ போதையாய்ச் செவிகளில் !

அற்புதன் ,அழகன் ,அண்ணன் ,மாவீரன் ,

வள்ளல் ,செம்மல்,இதய தெய்வம் என்பதாய்

மொழியைப் புரட்டிப் பொய்மையில் அமுக்கிச்

சொட்டச் சொட்ட ஊற்றிடும் போதை !

திக்குகள் திணறும் திகட்டும் லக்ஷார்ச்சனைகள் !

                                      &&

தாலாட்டெல்லாம் தட்டி விடுகிறேன் --

இதய  இமைகளை இழுத்து விரிக்கிறேன் !

இன்னமும் கூட உள்விழி முன்னே 

இத்தனை திரைகளா வரிசை விரிப்பன ?

                                      &&

பொய்யை இரையுண்டு பொய்க்கே  இரையாகி --

சேச்சே !ஒரு புத்தன் எழுகிறான் !

திரைகளைக் கிழித்து ஒப்பனை உடைத்து 

பொய்மையை அவிழ்த்து 

நிர்வாண உண்மையாய் நடந்து வருகிறேன் --

திரைகளின்  தீயில் பிழம்பாய் நின்ற நான் 

உண்மைச் சாம்பலாய் உயரப் பறக்கிறேன் ;

காற்றின் புனிதம் கலந்து திரிகிறேன் !

                                    &&

உலகே ! புகழ் மரியாதைகள் பொய்கள் பெறுகையில்

உண்மை உயிர்த்திட உளம் அஞ்சிடுதே !

ஏய்ப்பதில் ஒரு சுகம் !ஏமாற்றத்திலும் ஒரு சுகம் என

உன் சுழற்பாதை மாறும் நாள் என்றோ ?
  

-----சந்திர கலாதர்            
   

No comments:

Post a Comment